மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எதிரொலி: அடுத்தடுத்து 2 மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை.!
மே 06ம் தேதியான நேற்று 12ம் வகுப்பு மாணவர்களான அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதன் வாயிலாக மாணவர்கள் அடுத்தடுத்து தங்களின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.
இராமநாதபுரம் மாணவி தற்கொலை:
இந்நிலையில், இராமநாதபுரம் அரசுப்பள்ளி மாணவி சௌமியா, தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விருத்தாசலத்தில் சோகம்:
அதேபோல, கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த அபிநயா, கணித பாடத்தில் தோல்வியுற்ற காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.