திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆன்லைனில் போதை மாத்திரை விற்ற 5 இளைஞர்கள் கைது.!
சென்னை கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி ஆணைய உத்தரவின் படி தனிப்படையினர் நேற்று முன்தினம் மேற்கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் சுற்றி திரிந்த ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஈஸ்வரன், சஞ்சய், கௌதம், வெள்ளை அஜய், மதன்ராஜ் ஆகியோரே சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் புனேவில் 10 போதை மாத்திரைகளை ரூ.380 வீதம் 100 மாத்திரைகளை வாங்கி வந்து ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை ரகசிய இடத்திற்கு வரவழைத்து ஒரு மாத்திரை 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து 56 போதை மாத்திரைகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.