திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்ற அம்மாவிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு கடத்தல் நாடகம்; தாயை கதறவைத்த மகளை பதறவிட்ட போலிஸ்.!
தனது காதலனோடு உல்லாசமாக சுற்ற தாயிடம் கடத்தல் நாடகம் ஆடிய பெண்மணி இறுதியில் குட்டு வெளிப்பட்டு காவலர்களால் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண், தனது தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஒருவர் தன்னை கடத்தி வைத்து ரூ.50 ஆயிரம் பணம் கேட்பதாக கூறியுள்ளார். இதனால் அப்பெண்ணின் தாயார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காவல் துறையினர் மறுமுனையில் இருப்பவர்களுக்கு தொடர்பு கொண்டு பேசுகையில், எதிராளிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். ஒருபுறம் அவர்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டு வரவே, அவர்கள் பூந்தமல்லியில் இருப்பது உறுதியானது.
இதனால் காவல் துறையினர் அவர்களை கைது செய்ய விரைந்தனர். இதற்கிடையில், வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் இளம்பெண் தனியாக நின்றவாறு மீட்கப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோயம்பேட்டில் ஆட்டோவில் வந்த வாலிபர், 2 பெண்கள் தன்னை கடத்தி பணம் கேட்டு இங்கு இறக்கிவிட்டு சென்றுவிட்டனர் என கூறியுள்ளார்.
காவல்துறையினர் பெண்ணின் வாக்குமூலப்படி சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வுசெய்தபோது, இளம்பெண் அங்கு இருந்தது உறுதியானது. ஆனால், 2 தோழிகள் ஒரு ஆணுடன் ஜாலியாக தேநீர் அருந்தி பேசிவிட்டு இருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து, பெண்ணிடம் எச்சரித்து விசாரித்தபோது போலியான கடத்தல் நாடகம் அம்பலமானது.
தனது ஆண் நண்பரோடு ஜாலியாக ஊர் சுற்றி வர ஆசைப்பட்ட பெண்மணி, தனது தாயிடம் இருந்து பணத்தை அபகரிக்க முயற்சித்து அது தோல்வியில் முடிந்ததும் அம்பலமாகவே காவல் துறையினர் பெண், அவரின் தோழிகள், ஆண் நண்பரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.