திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கொடுமையே! சொந்த தொழில் தொடங்க கையில் பணம் இல்லை.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!
மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் வசித்து வருபவர் செல்வமணி. இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் ஒருவர் உள்ளார். மோகன் ராஜ் அங்குள்ள பஞ்சர் கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மோகன் ராஜ்க்கு சொந்தமாக பஞ்சர் கடை வைக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனால் மோகன்ராஜ் தனது தாயிடம் சொந்த தொழில் தொடங்க பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் மோகன்ராஜ் குடும்பம் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்ததால் வறுமையின் காரணமாக அவரது தாயால் மோகன் ராஜ்க்கு பணம் கொடுக்க இயலவில்லை.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மோகன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மோகன் ராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.