மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுப்பெண்ணை தாக்கிய கணவன், மாமனார்! காவல்துறை விசாரணை!!
நாகர்கோவில், கோட்டார் வடலிவிளை தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராம் பிரதாப் இவருக்கு வயது 42. ராம் பிரதாப் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அகிலேஸ்வரி என்னும் 37 வயது மனைவி இருக்கின்றார். இருவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று, வெளிநாட்டிற்கு சென்றிருந்த ராம் பிரதாப் ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் கணவன் மனைவி இடையே பண பிரச்சினை குறித்து சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால், ராம் பிரதாப் அவரது மனைவியை தாக்கியுள்ளார். ராம் பிரதாபின் தந்தையும் மருமகளை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால், படுகாயம் அடைந்த அகிலேஸ்வரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அகிலேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறை ராம் பிரதாப், அவரது தந்தை செல்லத்துரை மீது இந்திய தண்டனை சட்டம் 294பி 323, 506 2 ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.