திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் பறிபோன 2 உயிர்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே வசித்து வருபவர் தாஸ். இவர் நிகிதா என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தாஸ் திருமணத்திற்கு பின் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார்.
இதன் காரணத்தால் கணவன்- மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தனது கணவனை எப்படியாவது திருத்தி விட வேண்டும் என்று நினைத்த நிகிதா ஒரு நாடகம் நடத்தினார்.
அதில் நிகிதா மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது போல் நடித்துள்ளார். அப்பொழுது கணவன் திரிந்திவிடுவார் என்று எண்ணி இந்த நாடக முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக நிகிதாவின் உடலில் தீ பற்றிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாஸ் தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சித்துள்ளார்.
ஆனால் அவருக்கும் தீ பரவி காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளன.