திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கடன் தொல்லையால் தம்பதி எடுத்த விபரீத முடிவு.! கதறி அழும் பிள்ளைகள்..!!
தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் என்னும் ஊரில் கல்யாணசுந்தரம் தெருவில் வசித்து வருபவர் பொன்னுதாஸ் இவருக்கு வயது 48 . இவர் திருமுடிவாக்கத்தில் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் ஒன்று சொந்தமாக நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி குன்றத்தூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். மகன் கல்லூரி படித்து வருகிறார். மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பொன்னுதாஸ் தொழிலுக்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். மேலும், அவருக்கு தெரிந்த பல இடங்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கி இருப்பதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து அவரது நிறுவனத்திலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். மேலும் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொன்னுதாஸ் அவரது மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் பள்ளியில் இருந்தும், கல்லூரியிலிருந்தும் வீடு திரும்பிய பிள்ளைகள் அவரது பெற்றோர்கள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுந்துள்ளனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த சிட்லபாக்கம் காவல் துறை பொன்னுதாஸ் மற்றும் அவரது மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.