மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டிற்கு பால் ஊற்ற வந்த இளைஞருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்... தட்டி கேட்ட கணவனுக்கு நிகழ்ந்த சோகம்!!
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் - கனகா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் மாரியப்பன் வீட்டிற்கு தினமும் பால் ஊற்றி வந்துள்ளார். அதில் கனகாவிற்கும் விக்னேஷ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் மாரியப்பன் வீட்டில் இல்லாத நேரம் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை வாடிக்கையாக கொண்ட நிலையில் ஒரு நாள் திடீரென மாரியப்பன் வீட்டிற்கு வரவே இருவரும் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மாரியப்பன் இருவரையும் கண்டித்ததுடன் அன்று முதல் விக்னேஷ் பால் ஊற்றுவதையும் நிறுத்தியுள்ளார்.
விக்னேஷை சந்திக்க முடியாமல் தவித்த கனகா, தடையாக இருக்கும் கணவனைப் போட்டுத்தள்ள வேண்டும் என விக்னேஷிடம் கூறியுள்ளார். அதற்கு விக்னேஷ்ம் சம்மதம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பைக்கில் வெளியே சென்ற மாரியப்பனை பின் தொடர்ந்து சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார் விக்னேஷ்.
இச்சம்பவம் குறித்து மாரியப்பனின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதனையடுத்து போலீசார் கனகாவிடம் விசாரணை மேற்கொண்டதில் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். பின்னர் போலீசார் கனகா மற்றும் விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.