திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவி மீது தீராத சந்தேகம்.. கணவர் செய்த கொடூர செயல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரது நெருங்கிய நண்பர் ஐயப்பன். இவர்கள் இருவரும் நெருங்கிய குடும்ப இந்த நிலையில் நேற்று ஐயப்பன் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி சௌந்தரராஜன் வீட்டிற்கு சென்று உனக்கும் என் மனைவிக்கும் என்ன தொடர்பு என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சௌந்தர்ராஜனிடம், ஐயப்பன் மீண்டும் தகராறு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உறவினர்களுடன் சேர்ந்து ஐயப்பன், சௌந்தர்ராஜனை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சௌந்தரராஜனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.