ஃபோன் ல சிரிச்சு பேசுறா... கணவனின் சந்தேக புத்தியால் தூக்கத்தில் கதறித் துடித்து உயிரிழந்த மனைவி..! 



husband killed his wife for doubt

நடத்தை சந்தேகத்தால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கம்பியால் கணவன் அடித்து கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

மதுரை அடுத்த டி.கல்லுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணன் - முருகம்பாள் தம்பதியினர். இவர்கள் தனியார் மில்லில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக கிருஷ்ணர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் முருங்காம்பாள் தினமும் செல்போனில் வேறு ஒரு நபருடன் பேசி வந்ததால், அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கிருஷ்ணன் அவருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

madhurai

நேற்றிரவு கணவன் - மனைவிக்கிடையேயான தகராறு முற்றியதால், கிருஷ்ணன் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் தலையில் கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே முருகாம்பாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்ததை தொடர்ந்து கணவர் கிருஷ்ணன் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.