மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் கள்ளக் காதலனுக்கு சரமாரி வெட்டு.. மகன், கணவன் சம்பவம்..!
மனைவியின் கள்ளக்காதலனை, கணவர் தனது மகன் மற்றும் மருமகனுடன் சேர்ந்து வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 120வது பிளாக்கில் வசித்து வருபவர் முருகன் (வயது 47). இவரது மனைவி ஷகிலா (வயது 40). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
இதனையடுத்து கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், ஷகிலா அருகாமையில் வசித்துவரும் மணிகண்டன் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இந்த விஷயம் கணவர் முருகனுக்கு தெரியவர, ஆவேசமடைந்த அவர் தனது மகன் வினோத் மற்றும் தனது மருமகன் அருண் குமார் ஆகியோருடன் சேர்ந்து மனைவியின் கள்ளக்காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மணிகண்டன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போன நிலையில், திடீரென முருகன் அவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் மணிகண்டன் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பின் இந்த விஷயம் எண்ணூர் காவல் துறையினருக்கு தெரியவர, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஷகிலாவின் கணவர் முருகன், மகன் வினோத் மற்றும் மருமகன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.