19 வயது இளம் பெண்ணிற்கும் 39 வயது ஆணுக்கும் நடந்த திருமணம்!! 44 நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி.. சேலம் கொடூரம்..



Husband killed wife and commit suicide over doubt on wife

புது பொண்டாட்டி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். 39 வயதாகும் தங்கராஜுக்கும், அவரது உறவுக்காரப் பெண்ணான 19 வயது மோனிஷா என்ற பெண்ணிற்கும் கடந்த பிப்ரவரி 24ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்தே மோனிஷா யாருடனோ அதிக நேரம் செல்போனில் பேசுவதாகவும், வாட்ஸப்பில் சாட் செய்வதாகவும் கூறி அடிக்கடி தங்கராஜ் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தங்கராஜ் வெளியே சென்றிருந்தபோது மோனிஷாவின் அத்தை மகன் ஒருவர் மோனிஷாவின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்திருக்கும் அத்தை மகனுக்காக மோனிஷா அருகில் இருக்கும் கடைக்கு சென்று கேக் வாங்கி வந்து கொடுத்துவிட்டு, இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தங்கராஜுக்கு தனது மனைவி மீது மேலும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மோனிஷாவின் அத்தை மகன் வெளியே போகும் வரை காத்திருந்த தங்கராஜ், அவர் வெளியே சென்றதும் தனது மனைவியிடம் இதுகுறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இதனை அடுத்து உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் அன்று இரவு மோனிஷா - தங்கராஜ் இருவரும் உறங்க சென்றபோது இந்த சம்பவம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தங்கராஜ், அருகில் இருந்த கத்தியை எடுத்து மோனிஷாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான்.

இந்நிலையில் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது இருவரும் சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவ தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.