மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2வது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. கணவன் கைது.!
மதுரை மாவட்டம் கருங்காலங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் நல்லையன்- கலைச்செல்வி. இந்த தம்பதியம் இருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை குழந்தை இல்லை.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கலைச்செல்வியின் சகோதரி ஒருவர் கணவரை பிரிந்து காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே கலைச்செல்வியின் சகோதரியை தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என நல்லையன் தனது மனைவியுடன் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு கலைச்செல்வி மறுப்பு தெரிவித்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த நல்லையன், மனைவி கலைச்செல்வியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நல்லவனை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.