மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துடிக்க துடிக்க மனைவியை கொன்றுவிட்டு கணவன் போட்ட பலே நாடகம்! வெளியென பகீர் காரணம்.
விழுப்புரம் மாவட்டம் குணமங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 32. இவருக்கும் தவமணி வயது 24 என்ற உறவுக்கார பெண்ணிற்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி சண்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தவமணி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக மணிகண்டன் தவமணியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அங்கு வந்த தவமணியின் பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் தவமணியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் தவணையில் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல முயன்றுள்னனர். அப்போது, தனது மனைவியை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடியாது என மணிகண்டன் போலீசாருடன் தகராறு செய்துள்ளார்.
மனைவி மீது இருக்கும் பாசத்தினால்தான் மணிகண்டன் இவர் செய்வதாக நினைத்த போலீசாருக்கு பின்னர் அதிர்ச்சி காத்திருந்தது. தவமணியை சோதித்தால் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் காயம் இருந்தது. இதனை அடுத்து மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார்.
மணிகண்டன் வந்தால்தான் சடலத்தை தருவோம் என போலீசார் கூற ஊர் காரர்களுடன் மணிகண்டன் வந்துள்ளார். அவரை கைது செய்து போலிசார் விசாரித்ததில், அவருக்கும், அதே ஊரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததாகவும், அவருடன் அவ்வப்போது வெளியே சென்றுவர மணிகண்ட இருசக்கர வாகனம் வாங்கியதாவும் கூறினார்.
மேலும், வாகனத்திற்கு டியூ கட்ட முடியாததால் தனது மனைவியிடம் அவரது வீட்டில் இருந்து ரூபாய். 20 ஆயிரம் வாங்கிவருமாறு கூறியதாகவும், இதனால் ஏற்பட்ட தகரத்தில் மனைவியை அடித்து கொன்றுவிட்டு தூக்கு போட்டுக்கொண்டதுபோல காண்பிக்க சேலையில் கட்டி தொங்கவிட்டதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கட்டிய கணவனே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகம் ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.