மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசை ஆசையாக காதலித்து திருமணம்! நள்ளிரவில் வீட்டில் சடலமாக தொங்கிய மனைவி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்
சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்துவருபவர் ஜெயராஜ். இவரும், இலக்கியா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டு வேளச்சேரியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இலக்கியா அருகில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். பெரும்பாலும் வேலை முடிந்து இலக்கியா இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரால் வீட்டில் சமையல் செய்ய முடியவில்லை. இதனால் தான் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில்லையே கணவனுக்கும், தனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் இலக்கியா.
ஏன் தினமும் கடையில் உணவு வாங்கி வருகிறாய்? வீட்டில் சமைத்தால் என்ன என ஜெயராஜ் தனது மனைவியுடன் தினமும் சண்டை போட்டு வந்துள்ளார். இந்த சண்டை சமீபத்தில் வாக்குவாதமாக மாறியதை அடுத்து ஜெயராஜ் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்த்துகொண்டதுபோல் தூக்கில் தொங்க விட்டுள்ளார்.
பின்னர் தனது மனைவி இறந்துவிட்டதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இலக்கியாவின் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்து கணவனிடம் தீவிர விசாரணையில் இறங்கினர். போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் தான்தான் தனது மனைவியை கொலை செய்ததாக ஜெயராஜ் ஒத்துக்கொண்டார்.