மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமாகி 17 ஆண்டுகளாகியும் மனைவி மீது தீராத வெறி... கணவனின் வெறிச்செயலால் துடிதுடித்துப்போன மனைவி..!!
திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கணவன் அவரை கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் முடிந்த நிலையில், இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சுலைமான் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கேஸ் ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சுலைமானுக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் மும்தாஜிடம் சுலைமான் தகராறில் ஈடுபட்ட நிலையில், ஆவேசமடைந்து திடீரென அருகிலிருந்த ஷு லேஸால் மனைவியின் கழுத்தை இறுக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மும்தாஜ் துடித்துவிட்டு உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்ததை கண்ட சுலைமான் உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த போது, அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து ராணிப்பேட்டை காவல்துறையினர் சுலைமானை கைது செய்தனர்.
மேலும் மும்தாஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்தாஜை கொலை செய்ததற்கு சந்தேகம் மட்டும் தான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்றும் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.