மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வங்கியில் வேலை பார்த்த கணவன், மனைவி..கணவன் உதவ மறுத்ததால் மனைவி எடுத்த விபரீதம் முடிவு..
ஊட்டியை சேர்ந்தவர் ஹரி கணேஷ் - பிரியதர்ஷினி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடங்களே ஆன நிலையில் இருவரும் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கு காரணமாக இருவரும் வீட்டிலேயே இருந்து பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரியதர்ஷினி நேற்று முன்தினம் இரவு பணிபுரியும் போது கணவரிடம் அதிக பணி சுமை இருந்த காரணத்தால் உதவி கேட்டுள்ளார். ஆனால் ஹரி கணேஷ் உதவி செய்ய மறுத்துள்ளார். அதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
அதனையடுத்து பிரியதர்ஷினி தூங்குவதற்காக அறைக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார். நேற்று காலை வெகு நேரம் ஆகியும் பிரியதர்ஷினி அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹரி கணேஷ் கதவை உடைத்து பார்த்துள்ளார்.
அப்போது பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.