திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது.!
தர்மபுரி அருகே ஆசை வார்த்தை கூறி மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பில் பருத்தி பகுதியில் தமிழ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தராஜ் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆனந்தராஜ்க்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆனந்தராஜுக்கும், தனது மனைவியின் தங்கைக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனிடையே அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சேலத்தில் உள்ள லோகூர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால், அந்த பெண் 2 மாத கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து கணவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.