மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா ஊரடங்கில், தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு கணவர் செய்த நெகிழ்ச்சி காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை மாதவரம், நேரு தெருவில் வசித்து வந்தவர் ஏழுமலை, இவருக்கு மாதவரம் மண்டல அலுவலகத்திற்கு எதிரே உள்ள சொந்தமான கட்டடத்தில், 14 கடைகள் உள்ளன. அவர் அதனை வாடகைக்கு விட்டிருந்தார். அங்கு டீக்கடை, செருப்புக்கடை, சலூன் கடை, ஜெராக்ஸ் கடை, போட்டோ ஸ்டுடியோ என பலகடைகள் உள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அந்த கடைகளை நடத்தியவர்கள் வருமானமின்றி பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கட்டட உரிமையாளர் ஏழுமலை, தனது மனைவி பரமேஸ்வரியின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு தனது கட்டடத்தில் கடை நடத்தி வருவோருக்கு உதவ வேண்டுமென எண்ணியுள்ளார். அதன்படி அவர்களுக்கான ஒரு மாத வாடகையை அவர் தள்ளுபடி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அனைத்து கடைகளின் ஒரு மாத மொத்த வாடகை 99,150 ரூபாய். தற்போதைய சூழ்நிலையில் இது எனக்கு பெரிய தொகை தான். ஆனால் இன்று எனது மனைவிக்கு 49வது பிறந்த நாள். இந்த நாளில், நமக்கு தெரிந்தவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டுமென நினைத்தேன். அதனாலேயே வாடகையை தள்ளுபடி செய்தேன்.
இது எனக்கு கொரோனா கற்றுத் தந்த பாடம். இப்போதைய சூழலில் மற்றவர்களும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவினால் நம்மால் எளிதில் கொரோனாவை வெல்ல முடியும் என அவர் கூறியுள்ளார்.