திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவர்... பின் நடந்த விபரீதம்!!
சேலம் மாவட்டம் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் -சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் சாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது ஜெய்சங்கருக்கு அதே பகுதியை சேர்ந்த சின்ன பொண்ணு என்ற பொண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. சின்ன பொண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ள நிலையில் ஜெய்சங்கருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது ஜெய்சங்கர் மனைவி சாந்திக்கு தெரியவரவே தனது மகன்களை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஜெய்சங்கர் கள்ளக்காதலியுடன் தான் உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவியின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் ஜெய்சங்கர் மற்றும் அவரின் கள்ளக்காதலி சின்ன பொண்ணு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.