மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எத்தனையோ முறை எச்சரித்தும் கேட்காத இளைஞர்... கடைசியில் கணவரின் வெறி செயல்...
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார் பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன் யாதவ் என்ற இளைஞர். இவர் திருப்பூரில் நெசவாளர் காலனியில் தனது சகோதரனுடன் தங்கியுள்ளார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திராதாரி என்ற நபர் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பக்கத்து பக்கத்து வீடு என்பதால் உபேந்திராதாரியின் மனைவி சித்ரா தேவிக்கு பவன் யாதவ் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வரவே அவர்கள் மூலம் உபேந்திராதாரிக்கு தெரியவந்துள்ளது. மனைவியுடனான கள்ளத்தொடர்பை விட்டு விடும் படி பவன் யாதவ்வை எச்சரித்துள்ளார் உபேந்திராதாரி.
ஆனால் இருவரும் அதனை காதில் வாங்கி கொள்ளாமல் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உபேந்திராதாரி இது குறித்து பவன் யாதவ்வை நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவன்யாதவ்வை கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த பவன்யாதவ்வை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பவன்யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள உபேந்திராதாரியை தேடி வருகின்றனர்.