ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கள்ளக் காதலை கைவிட மறுத்த கணவன்... ஆசிட் ஊற்றிய மனைவி... ஈரோட்டில் பயங்கரம்.!
ஈரோடு அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் அருகவுள்ள கனி ராவுத்தர் குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம் மற்றும் பத்மா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களது மகள் ஏற்கனவே இறந்து விடவே மகன் திருச்சியில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இதனால் வீட்டில் சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி பத்மா இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியத்திற்கும் அப்பகுதியை சார்ந்த வேறொரு பெண்ணிற்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறும் நடந்திருக்கிறது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று மீண்டும் சுப்பிரமணியத்தின் கள்ளக்காதலை கைவிடும்படி அவரது மனைவி பத்மா தகராறு செய்திருக்கிறார். ஆனால் சுப்பிரமணியன் விடாப்படியாக இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பத்மா கழிவறையை கழுவ வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவரது முகத்தில் ஊற்றி உள்ளார். இதில் வலி தாங்காமல் அலறி துடித்த சுப்பிரமணியனை கட்டையால் தலையில் அடித்தே கொடூரமாக கொலை செய்திருக்கிறார் அவரது மனைவி. இதனைத் தொடர்ந்து சம்பவமறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலை செய்த அவரது மனைவி பத்மாவை கைது செய்தனர்.