#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை.. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு.!
ஈரோடு மாவட்டம் அசோக் நகர் பகுதியில் வேலுசாமி - வெங்கடத்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெங்கடத்தம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து வெங்கடத்தம்மாள் வயதான காலத்தில் நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்க கூடாது என்று தன்னை சுற்றி உள்ளவர்களிடம் அடிக்கடி கூறியுள்ளார். மேலும் வெங்கடத்தம்மாள் தன்னுடைய உடல் நலம் மோசமாக இருப்பதை பற்றிய கவலையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வெங்கடத்தம்மாள் சற்று முக வாட்டதோடு காணப்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் தட்சிணாமூர்த்தி வெங்கடத்தம்மாளிடம் உடல் நிலையில் ஏதும் தொந்தரவு இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு வெங்கடத்தம்மாள் தன் மகனிடம் தான் கழிப்பறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திரவத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி தனது தாயை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் வெங்கடத்தம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து ஈரோடு காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வெங்கடத்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.