மக்களே உஷார்.. H3N2 வைரஸ் யாரையெல்லாம் தாக்கும்?..! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!!
இந்தியாவில் பருவம் மாறிய பருவமழை மற்றும் கோடையின் காரணமாக தற்போது அது சார்ந்த நோய்களும் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் பலரையும் இருமல் மற்றும் காய்ச்சலுக்கு உள்ளாக்கிய H3N2 வைரஸ் இந்தியாவில் பெருமளவில் பரவியது.
H3N2 உறுதி செய்யப்பட்ட நிலையில், அது குளிர்காலத்தில் ஏற்படும் சாதாரண காய்ச்சல்தொற்று என்றாலும் அதன் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல்நலம் குன்றியோர், இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தீவிரத்துடன் கூடிய H3N2 வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.