இனி 10 ரூபாய் நாணயத்தை வாங்காதவர்களுக்கு ஆப்பு.. வெளியான திட்டவட்ட அறிவிப்பு.!



if-you-refuse-to-buy-this-currency-you-will-be-imprison

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயத்தை யாராவது வாங்க மறுப்பு தெரிவித்தால், அவர்களுக்கு 3 வருடங்கள் வரையில் சிறை தண்டனையும் அபராதமும்  விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கதல்ல என்று பொதுமக்களிடையே பரவலாக ஒரு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அது குறித்து, பல்வேறு அறிக்கைகளை ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கின்ற போதும் அந்த 10 ரூபாய் நாணயம் செல்லத்தக்கதல்ல என்ற பொய்யான வதந்தியை பலர் பரப்பி வருகிறார்கள்.

10 Rupee Coin

இன்று வரையிலும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருக்கின்ற கடைகளில் இந்த 10 ரூபாய் நாணயம் வாங்கப்படுவதில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாணயத்தை வாங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெளியிடப்பட்ட இந்த 10 ரூபாய் நாணயத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதன் முதலில் வெளியிட்டிருக்கிறது. அதன் பின் இந்த 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் விடப்பட்டது. 14 வகையிலான 10 ரூபாய் நாணயங்கள் இதுவரையில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாணயமும் மற்றொரு நாணயத்திலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. ஒரு நாணயத்தின் சின்னமிருக்கும் இன்னொரு நாணயத்தில்  சின்னமிருக்காது.. ஆகவே பொதுமக்கள் இந்த நாணயத்தை உண்மையான நாணயமில்லை என்று கூறத் தொடங்கினார்கள்.

10 Rupee Coin

அதன் பிறகு மெல்ல, மெல்ல 10 ரூபாய் நாணயத்தை வங்கிகள்  நிறுத்த முடிவெடுத்து விட்டன என பலவிதமான வதந்திகள் பொதுமக்களிடையே பரவலாக காணப்பட்டது. இந்நிலையில் தான் இந்த 10 ரூபாய் நாணயத்தை யாராவது வாங்க மறுத்தால், அவர்களுக்கு 3 வருடங்கள் வரை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.