மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் கழிவறைக்குள் பேராசிரியர் செய்த காரியம்! உள்ளே சென்ற மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
சென்னை, கிண்டியில் உள்ள, ஐ.ஐ.டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, சுபம் பானர்ஜி என்பவர், வானுார்தி பொறியியல் பாடப்பிரிவின், திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரோ ஸ்பேஸ் ஆய்வகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது உதவிப்பேராசிரியர் சுபம் பானர்ஜி பெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதில் சந்தேகமடைந்த அந்த மாணவி கழிவறைக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஓட்டையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் மூலம் அதிர்ச்சி அடைந்த பெண் இது குறித்து மாணவ மாணவிகள் அனைவரிடமும் கூறியுள்ளார். பின்னர் ஆண்கள் கழிவறைக்குள் மறைந்திருந்த சுபம் பானர்ஜியிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அந்த மாணவி ஆடைகளை கழற்றும் வீடியோ செல்போனில் இருந்துள்ளது. மேலும் அவரைப் போன்று பல மாணவிகளின் வீடியோக்களும் செல்போனில் பதிவாகியுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த வீடியோக்கள் அனைத்தையும் அழித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுபம் பானர்ஜியை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் அவர் பல ஆண்டுகளாக இதுபோன்று பெண்கள் கழிவறைக்குள் வீடியோ எடுப்பதும், அதனை இரவு ரசித்து பார்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.