தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இசைஞானிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு.. அல்டிமேட் லெவலில் எதிர்ப்புகளுக்கு கண்டனம்.!
இசைஞானி இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இந்த விசயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த இடதுசாரி நெட்டிசன்கள், வலதுசாரி கொள்கை கொண்டவரை நீங்கள் எப்படி ஆதரிப்பீர்கள்? என்று பல கேள்விகளை எழுப்பி இசைப்பணியை மற்றும் கவனியுடன்கள் என்று கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பாஜக தரப்பு கடுமையான பதிலடி கொடுத்து வரும் நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இசைஞானிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலாவது;
"இசைஞானி இளையராஜா பார்புகளும் பிரதமரையும், அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு அடிமனதில் இருப்பதை, தன் உணர்வை வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதற்கு வெறுப்பு அரசியல் செய்யும் சிலர் அவரை சூடான வெறுப்பு சொற்களால் விமர்சனம் செய்வது சரிதானா?.
கருத்துக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பது சிலருக்கு மட்டும் தானா? அல்லது கருத்துக்களுக்கு மட்டும் தானா?. தனது கருத்தை கூறிய இளையராஜாவிற்கு முழு சுதந்திரம் இருக்கும் என்பதை உரக்க நாம் இங்கு சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே!" என்று தெரிவித்தார்.