மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற 40 வயது பெண்ணுக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூர சம்பவம்.!
கிருஷ்ணகிரியில் 40 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே குண்டியல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 40). கணவரை இழந்த இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி வீட்டிற்கு அருகே புடவையால் கழுத்து நெறிக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை (24)என்ற நபர் அம்பிகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், ஏழுமலைக்கும், அம்பிகாவுக்கும் இடையே தகாத உறவு தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அம்பிகாவை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஏழுமலை கடந்த நான்காம் தேதி இரவு அம்பிகாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது நான் இங்கு வந்துள்ளேன் உல்லாசமாக இருக்க வெளியே செல்லலாம் என அழைத்துள்ளார். இதனை நம்பி அம்பிகாவும் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அம்பிகாவை ஏழுமலை மற்றும் அவரது நண்பர்களான கோவிந்தசாமி (வயது 23), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் மயக்க நிலையில் கிடந்த அம்பிகாவை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து தற்போது 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.