குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து 2 வயது சிறுவன் பலி; அலட்சியத்தால் நேர்ந்த சோகம்.. குடும்பமே கண்ணீர்.!



in Chengalpattu Thiruporur 2 year Old Boy Dies in Accident 

 

பொதுமக்களுக்கான சேவை செய்ய பள்ளம் தூண்டப்படுகிறது எனில், அதனை முறையாக பணியை முடித்ததும் மூடாவிடில் ஏற்படும் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட, திருப்போரூர்-திருக்கழுக்குன்றம், சிறுதாவூர் பகுதியில் இருக்கும் குடிநீர் கிணறுகள் மூலமாக, கிணற்றில் இருந்து பேரூராட்சி வார்டுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சாலை விரிவாக பணியோடு, புதிய குழாய்கள் அமைக்கும் பணியும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிங்க: #BigNews: மேல்மருவத்தூர்: குற்றவாளியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் பயணம்; உதவி ஆய்வாளர் உட்பட பெண் காவலர்கள் இருவர் பரிதாப பலி.!

தோண்டிய பள்ளத்தை மூடவில்லை

இதற்காக ஆமூர் - சிறுதாவூர், தென்னத்தோப்பு பகுதியில் புதிய குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் நிறைவுபெற்றதும் பள்ளத்தை மூடாமலேயே அதிகாரிகள் சென்றுள்ளான். தடுப்புகளும் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. இதனிடையே, ஆமூர் பகுதியில் வசித்து வரும் நபர் தேவராஜ் (வயது 30).

Chengalpattu

நொடியில் விபத்து

இவர் தனது மனைவி, கைக் குழந்தையுடன் திருப்போரூர் நோக்கி பயணம் செய்தார். அப்போது, மேற்கூறிய பள்ளத்தில் திடீரென வாகனம் சறுக்கி, தேவராஜ், அவரின் மனைவி, 2 குழந்தைகள் என நால்வரும் பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தனர். இதில் தேவராஜ் சுயநினைவை இழந்த நிலையில், 2 வயது குழந்தையான மோகித் படுகாயம் அடைந்தார். 

குழந்தை பலி

இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இதில் மேல் சிகிச்சையாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட மோகித், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருக்கின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் குழாய் பதித்தும் பள்ளத்தினை மூடி இருந்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டு இருக்கும் எனவும் அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அப்பா அம்மாவை கூட்டிட்டு வாப்பா... போதையில் மகனை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற தகப்பன்.!