புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்.. நீரில் மூழ்கி 2 சிறார்கள் பலி.!



in Chennai Kalpakkam 2 Minor Boys Dies Swept away Tidal Wave 

 

உறவினரின் வீட்டிற்கு சென்றவர்கள், கடலில் குளிக்கச் சென்று மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவரின் மகன்கள் நிதிஷ் (வயது 15), திவாஸ் (வயது 14). இருவரும் நண்பர்கள் ஆவார்கள். புத்தாண்டை கொண்டாட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

இதையும் படிங்க: மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை சவக்கோலத்தில் பார்த்த பெற்றோர்.. போதை ஆசாமிகளால் சோகம்.!

சிறார்களின் உடல் மீட்பு

இன்று நகரியப்பகுதியில் இருக்கும் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துக்கொண்டு இருந்தபோது, இருவரும் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி மூழ்கி இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கல்பாக்கம் காவல்துறையினர், மீனவர்களின் உதவியுடன் சிறார்களை தேடினர்.

இருவரும் பலி

சிறார்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள கடற்கரையில் குளிக்க காவல்துறையினர் தடையும் விதித்தனர்.
 

இதையும் படிங்க: போதையில் புத்தாண்டு கொண்டாட்டம்.. தட்டிக்கேட்டவர் 3 பேர் கும்பலால் வெட்டிக்கொலை.!