மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிலம் தொடர்பான தகராறு... விவசாயி எரித்துக் கொலை... சொந்த தம்பியே கொலை செய்தாரா.? காவல்துறை விசாரணை.!
கரூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஓப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள மாயனூர் அருகே இருக்கும் ராசாக்கவுண்டனுர் பகுதியையே சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக தகராறு நீண்ட நாட்களாகவே இருந்து வந்திருக்கிறது. பொதுக் கிணற்றில் இருந்து நீர் எடுப்பது சம்பந்தமாகவும் அண்ணன் தம்பிகளுக்கு இடையே பகை இருந்திருக்கிறது. இது தொடர்பான வழக்கம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக செல்வதாக கூறிவிட்டு கருப்பண்ணன் தனது தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர் அப்போது கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் எரிக்கப்பட்டு பிணமாக கடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய்களை வைத்து சோதனை நடத்தினர். மேலும் தடவியல் பொண்ணுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பண்ணன் குடும்பத்தினர் அவரது தம்பி காத்தவராயன் தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.