திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாத்தா-பேரனின் உயிரை பறித்த மின்சாரம்; எமனாக மாறிய ஃபேன் சுவிட்ச்.! கரூரில் சோகம்.!!
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, வயலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் திருக்குமரன் (14). வீட்டில் சிறுவன் நேற்று இரவில் மின்விசிறியை இயக்க, அதனை ஸ்விட்சில் கேபிளை திணித்து இருக்கிறார். அச்சமயம், அவரின் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
மின்சாரம் உடலில் பாய்ந்ததும் அலறிய சிறுவனை மீட்க, அவரின் தாத்தா சீனிவாசன் முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் தாத்தா - பேரன் மீது மின்சாரம் பாய்ந்து, இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இருவரின் மரணம் உறுதி
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களின் மரணத்தை உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: துணிதுவைக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!
தாத்தா-பேரன் மரணத்தை அறிந்த குடுமப்த்தினர், கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகினர். மேலும், அவர்களின் உடலை கட்டியணைத்து கதறியழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தாய் உயிர் பிழைப்பு
திருகுமாரனின் தாய் ரேவதியையும் மின்சாரம் தாக்கிய நிலையில், அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமரனின் தந்தை வீட்டின் மெயின் ஸ்விட்சை ஆப் செய்ததால் ரேவதி உயிர்தப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: திருமணமான ஒரேநாளில் உயிரிழந்த மணமகன்; பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள்.!