மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கரூர்: வீட்டிற்கு வரும் வழியில் காத்திருந்து உயிர் பறித்த எமன்; 14 வயது சிறுவன் பலி.!
கால்வாயில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சிறுவன் பலியாகினர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முகமது உஸ்மான் (வயது 14). சிறுவன் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: கரூர்: தமிழுக்கு வந்த பகீர் சோதனை: அங்கன்வாடி மைய திறப்பு விழாவில் வேதனை.!
இன்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற மாணவர், பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம், மழை காரணமாக கால்வாயில் தண்ணீர் சென்றது.
சிறுவன் கால்வாயில் தவறி விழுந்ததாக கூறப்படும் நிலையில், அதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுவன் சடலமாக மீட்பு
தகவல் அறிந்ததும் நேரில் வந்த அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டாலும் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விசயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடும்பப்பிரச்சனையில் விபரீதம்; மகனை கிணற்றில் தூக்கி வீசி, தாய் தற்கொலை.!