#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வற்புறுத்திய கள்ளக்காதலன்.. வேண்டாம் என்றும் கேட்காததால் இளைஞர் கொலை.. தோழியுடன் சேர்ந்து கள்ளக்காதலி சம்பவம்.!
நீ என்னுடனே இருக்க வேண்டும் என இரண்டாவது கள்ளக்காதலன் வற்புறுத்தியதால், ஆத்திரத்தில் பெண் இளைஞரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கண்ணூரில் வசித்து வருபவர் ராஜா. பூச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி. இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு திருமணம் முடிந்து, தனித்தனியே குடும்பம் இருக்கிறது. இதனிடையே, எதிர்பாராத விதமாக இருவருக்குமிடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து பலியான 17 வயது பள்ளி மாணவி; மதுரையில் சோகம்.!
இதனால் கள்ளக்காதல் ஜோடி செக்கானூரணி, பசும்பொன் நகரில் வீடெடுத்து கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளது. ராஜா டீக்கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார், வள்ளி கூலித்தொழிலாளியாக கட்டிட வேலைக்கு சென்று இருக்கிறார். இதனிடையே, வள்ளிக்கு தன்னுடன் பணியாற்றி வரும் செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல்கள்
வள்ளி - செல்வம் ஆகியோர், ராஜா வீட்டில் இல்லாத நேரத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த அக்.4 ம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்ற ராஜா, மீண்டும் வீட்டிற்கு வந்தபோது செல்வம் சடலமாக வீட்டில் கிடந்தார். இந்த விஷயம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்த காவல் துறையினர், செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தன்னுடன் வர அழைப்பு விடுத்த நம்பர் 2
பின் இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், வள்ளி தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜா கடைக்கு சென்ற பின்னர் வள்ளி, செல்வம், வள்ளியின் தோழி வளர்மதி ஆகியோர் ஒன்றாக மதுகுடித்து இருக்கின்றனர். அப்போது, செல்வம் ராஜாவுடன் நீ இருக்க வேண்டாம், என்னுடன் வா என அழைத்துள்ளார்.
பளார் விட்டதில் வந்த தகராறு
இந்த விசயத்திற்கு மறுப்பு தெரிவித்த வள்ளி, என்னுடன் நீ இருக்க வேண்டும் என கூறினால் சரிவராது என கூறியுள்ளார். அப்போது இருதரப்பு வாக்குவாதம் உண்டாகி, செல்வம் வள்ளியை கன்னத்தில் பளார் விட்டுள்ளார். ஆத்திரமடைந்த வள்ளி பதிலுக்கு அறைய, அங்கு இருவரும் சண்டையிட்டுள்ளனர். வள்ளிக்கு ஆதரவாக அவரின் தோழி சண்டையிட, ஒருகட்டத்தில் அங்கிருந்த கயிற்றை எடுத்து செல்வத்தின் கழுத்தை இறுக்கியத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின் கொலை செய்துவிட்டோம் என அவரை அங்கேயே விட்டுவிட்டு தோழிகள் தப்பிச்சென்றனர். தப்பிச்சென்ற தோழிகள் இருவரும் ஒரு வார தேடலுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: "எப்ப பாரு ஃபோன நோண்டிக்கிட்டு.." பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.!! மாணவிக்கு நேர்ந்த துயரம்.!!