மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆயில் மில்லில் படுபயங்கரம்.. பெண் உடல் நசுங்கி மரணம்.. மதுரையில் பகீர் சம்பவம்.!
இயந்திரத்தில் பெண்ணின் உடை சிக்கி இழுக்கப்பட்டதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம், வாகைகுளம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் ராமுத்தாய் என்ற பெண்மணி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: 35 ஆண்டுகளாக அரசால் முடியாததை, தனிமனிதனாக முடித்த நபர்.! குவியும் பாராட்டுக்கள்.!
ஆடை சிக்கி சோகம்
அவர் பணியாற்றி வந்தபோது, ராமுத்தாயின் ஆடை ஆயில் இயந்திரத்தின் மோட்டாரில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட பெண், உடல் நசுங்கி பரிதாபமாக நொடியில் உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை
விபத்தைக்கண்டு பதறிய தொழிலாளர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த திருமங்கலம் காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: "கண்டா வரச்சொல்லுங்க" - மதுரை எம்.பி வெங்கடேசனுக்கு எதிராக போஸ்டர்.. காரணம் என்ன?.!