"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
35 ஆண்டுகளாக அரசால் முடியாததை, தனிமனிதனாக முடித்த நபர்.! குவியும் பாராட்டுக்கள்.!
அரசு கடந்த 35 ஆண்டுகளாக செய்யாத விஷயத்தை, அரசிடம் போராடிபார்த்தும் பலனில்லை என்ற காரணத்தால் தாமாக முன்வந்து சொந்த செலவில் தூர்வாரினார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, பெருமங்கலம் பிரதான கால்வாயில் இருந்து பிரியும் 5ம் எண் கிளை கால்வாய் வாயிலாக, 5 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் பிற கண்மாய்கள் மழைக்காலங்களில் நீர் வரத்தை பெரும்.
தூர்வாரப்படாமல் இருந்த கால்வாய்
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணிகள் நிறைவுபெற்று நீர் வந்த நிலையில், 35 ஆண்டுகளாக தூர்வாரும் பணியை அரசு கிடப்பில் போட்டதன் காரணமாக அவை மண், மரங்கள் நிறைந்து நீர் பாதை இல்லாமல் போயுள்ளது. இதனால் கண்மாயும் நீர் வரத்து இன்றி வற்றியுள்ளது.
இதையும் படிங்க: "கண்டா வரச்சொல்லுங்க" - மதுரை எம்.பி வெங்கடேசனுக்கு எதிராக போஸ்டர்.. காரணம் என்ன?.!
சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயல்
இதனையடுத்து, ஜெயராமன் என்ற சமூக ஆர்வலர், ஊர் பொதுநலத்திற்கு தனது சொந்த செலவில் கால்வாயை தூர்வாரி இருக்கிறார். பிரதான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், பருவமழை காலங்களில் கண்மாய்க்கு நீர் வழங்கி அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராட்டுகளை குவிக்கிறது.
இதனால் 5 ஊர்களில் உள்ள சிறிய கண்மாய் முதல் பெரிய கண்மாய் வரை பகுதியளவு நிரம்பினால் ஊர் லேசான செழிப்பை பெரும் எனவும் அவர் தெரிவிக்கிறார். ஊர் செழிக்க வேண்டி ஜெயராமன் செய்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: பயங்கரம்... 3 லட்ச ரூபாய் பணத்திற்காக தந்தை படுகொலை.!! மகன் வெறி செயல்.!!