திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பழனி: கணவன் மனைவி சண்டை... விபரீத முடிவு எடுத்த 13 வயது மகள்.!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தாய் மற்றும் தந்தைக்கிடையான அடிக்கடி சண்டை நடந்து வந்ததால் விரக்தியடைந்த மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .
திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு தேவதர்ஷினி என்ற 13 வயது மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். செந்தில்குமார் மற்றும் கவிதா இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்றிரவு கணவன் மற்றும் மனைவிக்கு இடையே சண்டை நடைபெற்று இருக்கிறது. இதனால் கோபமடைந்த கவிதா வீட்டை விட்டு வெளியேறி பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். இதன் காரணமாக தனிமையில் இருந்த அவரது மகள் தேவதர்ஷினி விரக்தியில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் யாருமில்லாத போது தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் தேவதர்ஷினி. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் செந்தில்குமாரின் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட தேவதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் குடும்பச் சண்டையால் 13 வயது மகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.