மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கால்வாயில் தவறி விழுந்த பெண் தலையில் படுகாயமடைந்து பலி; ஊராட்சி மன்ற அலட்சியத்தால் சோகம்.!
தலையில் படுகாயமடைந்த பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி, காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் திலகவதி. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: வீட்டிற்கு வந்ததும் அம்மா மகனை காணக்கூடாத காட்சி; நெஞ்சம் பதறும் சம்பவம்.!
காந்தி நகர் பகுதியில் கால்வாய் ஒன்று திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை மூடக்கூறி பலமுறை ஊராட்சி மன்றத்தில் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் சாலையோரம் நடந்து செல்வோர், சற்று கவனமாக செல்ல வேண்டிய நிலையில் இருந்தது.
பெண் சிகிச்சை பலனின்றி பலி
இதனிடையே, நேற்று திலகவதி சாலையோரம் சென்றபோது, கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால் தலையில் காயமடைந்த பெண்மணி, உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்மணி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் காந்தி நகர் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ஊராட்சி மன்றத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த சோகம் நடந்ததாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்; ஹெல்மட் அணியாததால் இரண்டு பேர் பலி.!