திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாம்பரத்தில், மீன் வியாபாரம் செய்த கணவன் மனைவியை சரமரியாக வெட்டிய மர்ம கும்பல்.... அதிர்ச்சி சம்பவம்...!!
தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் கேகே நகர் மேட்டு தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன் (52). இவரது மனைவி ஜனகா. இருவரும் சேர்ந்து வண்டலூர் அருகேயுள்ள ஓட்டேரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மீன் கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கணவன் மனைவி இருவரையும், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் பார்த்திபன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர்த்தார்.
அவரின் மனைவி ஜனதா படுகாயம் அடைந்தார் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவர்களே நீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பார்த்திபனின் 15 வயது மகளுக்கு மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் பிரேம்குமார் செல்போன் மூலமாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
எனவே கடந்த டிசம்பர் மாதம் பார்த்திபனின் மகள் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து, பிரேம் குமாரை திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாக, இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.