மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருப்பூர்: விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல், தாக்குதல் சம்பவம்; ஐவர் அதிரடி கைது.!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விநாயகர் சிலைகளை கரைக்கவும் ஊர்வலம் சென்று, நீர் நிலைகளில் அதனை கரைத்து வருகின்றனர்.
இதனிடையே, இவ்வாறாக ஊர்வலம் செல்லும்போது சிலநேரம் விழா அமைப்பாளர்களிடம் போட்டி மோதல் நிலவி வருகிறது. அந்தவகையில், திருப்பூர் பகுதியில் இந்து முன்னணி அமைப்பார்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்டு இருந்தன.
போட்டாபோட்டியில் இருதரப்பு மோதல்
ஆனால், இறுதியில் ஊர்வலத்தின்போது, யாரின் சிலை முன்னே செல்வது என்பது தொடர்பான பிரச்சனை எழுந்தது. இந்த தகராறில் இருதரப்பு மோதிக்கொண்டது.
இதையும் படிங்க: "தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்"; சர்ச்சை பேனரால் அதிர்ச்சி.. டிசைனர் உட்பட 3 பேர் கைது.!
மேலும், அங்குள்ள போயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் சத்தியமூர்த்தி என்பவர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சத்தியமூர்த்தியின் மீது தாக்குதல் நடத்தியதாக நவீன் குமார், வெங்கடேஷ், தேவா, ஸ்ரீதர், பாலாஜி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பூர்: சொத்துக்காக இப்படியா?.. மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகன்.. அரங்கேறிய வெறிச்செயல்.!