திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆண் நண்பர்களுடன் பழக்கம்., மனதை அலைபாயவிட்ட இளம்பெண்ணால் மாமியார் எரித்துக்கொலை.. வெளியான திடுக் வாக்குமூலம்.!
மனதை அலைபாயவிட்ட பெண்ணின் செயலால், கணவர் - உழைத்து வாழும் மாமனார் - மாமியார் இருந்தும், கள்ளக்காதல் பழக்கத்தால் மாமியாரை மருமகள் எரித்துக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், என்.ஆர் பாளையம் காலனியில் வசித்து வருபவர் கருணாமூர்த்தி. இவர் கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் பிஏ துறையில் பயின்று வந்துள்ளார். இதே கல்லூரியில் பண்ரூட்டி, பாலூர் காலனியில் வசித்து வரும் சுவேதா (21) என்பவரும் பிஎஸ்சி துறையில் பயின்று வந்துள்ளார். இருவரும் காதல் வயப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் உல்லாசம்; ஆசைக்கு இணங்காததால் தனிமை வீடியோ லீக்.. தென்காசி இளைஞருக்கு காப்பு.!
மாமியார் வீட்டில் மருமகள்
திருமணத்திற்கு பின்னர் கருணா செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கருணாவின் தந்தை பாண்டியனும் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் மாமியார் ரமணி, மருமகள் சுவேதா ஆகியோர் என்.ஆர் பாளையம் இல்லத்தில் இருக்கின்றனர்.
மரணத்தில் மர்மம்
கடந்த 30ம் தேதி தீபாவளிக்கு முன்தினம், இரவு சுமார் 10 மணியளவில் ரமணி மர்மமான வகையில் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, தம்பதியின் இளைய மகன் தட்சணாமூர்த்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதிர்ச்சி தகவல் அம்பலம்
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுவேதாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது, சுவேதா தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொன்ற அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இந்த விவகாரத்தில் சுவேதா, அவரின் எதிர்வீட்டில் வசித்து வந்த கள்ளக்காதலன் சதீஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு காரணமாக பெண் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
கள்ளக்காதல் பழக்கம்
பி.எஸ்சி., பி.எட் முடித்துள்ள நான், கல்லூரியில் படிக்கும் நேரத்திலேயே ஆண் நண்பர்களுடன் தவறான பழக்கத்தில் இருந்தேன். எனது திருமணத்திற்கு பின்னர் கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்க்க, வீட்டில் நானும் - மாமியாரும் இருந்தோம். 2 மாதங்களுக்கு முன், எதிர்வீட்டில் வசித்து வந்த ஓட்டுநர் சதீஷ் குமாருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனிமையில் இருந்தோம். எனது மாமியார் ராணி கூலி வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீடு திரும்புவார், சில நேரத்தில் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருவார்.
மாமியாரை கொலை செய்ய திட்டம்
கிடைத்த சந்தர்ப்பங்களில் நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். இதனிடையே, தீபாவளிக்கு முன்பு நாங்கள் உல்லாசமாக இருந்ததை மாமியார் நேரில் பார்த்து கண்டித்தார். கடுமையான வார்த்தையால் தீட்டியவர், தீபாவளிக்கு ஊருக்கு வரும் மகனிடம் சொல்வதாகவும் கூறினார். இதனை நான் சதீஷிடம் சொல்ல, அவர் ரமணியை கொன்றுவிடலாம் என கூறினார். பெட்ரோல் வாங்க ரூ.500 பணம் கொடுத்த நிலையில், நான் பெட்ரோல் வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்தேன்.
தூக்க மாத்திரை கலந்துகொடுத்து எரித்துக்கொலை
பின், மாமியாரை பேசி வெளியே அழைத்துச் சென்று, தீபாவளிக்கு துணிகள் எடுத்துவிட்டு, ஹோட்டலில் ப்ரைடு ரைஸ் வாங்கிவிட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தோம். நான் முன்னதாகவே உரக்க மாத்திரையை வாங்கி வைத்திருந்து, அதனை பொடியாக்கி பிரைடு ரைஸில் கலந்து மாமியாருக்கு கொடுத்தேன். சாப்பிட்ட அவர் உறங்கியதும், சதீஷை வீட்டிற்கு வரவழைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தோம். பின் சதீஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட, ஓர் மக்கள் திரண்டு வந்து மாமியாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சதீஷும் எனக்கு உதவி செய்வது போல உடன் வந்தார். பின் எனக்கு எதுவும் தெரியாததுபோல் நாடகமாடிய நிலையில், விசாரணையில் மாட்டிக்கொண்டேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கொலைக்கு வித்திட்ட மதுவிருந்து; மணமகன் பார்ட்டி மர்டரில் முடிவு.. தென்காசியில் பயங்கரம்.!