தேசியக்கொடியை இப்படி பறக்க விடுறீங்களா?.. தப்பித்தவறியும் இப்படி செய்யாதீங்க..!



Independence day Flag Salute

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனை சிறப்பாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் தயாராகியுள்ளது. நாளை 75-ம் சுதந்திர விழா கொண்டாடப்பவுள்ள நிலையில் இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. 

தனிநபரின் வசதிக்கேற்ப சிறிய கம்பம் முதல் பெரிய அளவிலான கொடிக்கம்பம் வரை மக்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில வீடுகளில் தேசியக்கொடி சாய்ந்தவாறு ஏற்றப்படுகிறது. அது தவறானது என்று குறிப்பிட்டு முகநூலில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், "தவறுகள் திருத்தப்பட கூடியது.
அறிவுக்கு எட்டிய விஷயத்தை பதிவிடுகிறேன்.
பொன்விழா கொண்டாடும் தேசியக்கொடியினை பறக்கவிட சில விதிமுறைகள் உள்ளன. 

tamilnadu

ஆனால், அந்த விதிமுறைகளை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
அனைத்து கிராமங்களிலும் தேசியக்கொடிகள் கொடுக்கப்பட்டு அவர்கள் வீடுகளில் கட்டப்பட்டுள்ளது. தேசியக்கொடிகள் கீழ்கண்டவாறு படுக்கை நிலையில் உள்ளது. 
இது தவறான ஒரு விஷயம். 

தேசியக்கொடி செங்குத்தான கம்பத்தின் உச்சியில் பறக்க வேண்டும், அதுதான் மிகச் சரியான வழிமுறை. 
பொதுவாக தேசியக்கொடி என்பது காலையில் ஏற்றி மாலையில் இறக்கப்படவேண்டும். இப்போது பறக்கவிடப்படும் கொடிகள் இரவிலும் பறக்கும்  என நினைக்கிறேன். 

பெரும்பாலான கிராமங்களில்
தேசிய கொடிகள்  இந்த புகைப்படத்தில் உள்ளவாறு தவறாக பறக்கவிடப்பட்டுள்ளது. என்னால் இயன்ற வரை ஒரு சிலரிடம் இந்த மாதிரி கொடியை பறக்க விடாதீங்க என்று அவர்களின் தவறை திருத்தி இருக்கேன். 
இதுபோன்ற தவறுகளை நீங்கள் செய்ய வேண்டாம். 

பாலியஸ்டர் கொடிகள் ஏற்றுவதை விட கதர் கொடிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள். 
கொடிக்கான மரியாதை கொடுப்போம். கொடி காப்போம் தேச நலன் காப்போம். தேசியமும் காப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.