கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசிற்கு மத்திய அரசு நிதியுதவி! தொகை எவ்வளவு.?



indian government relief fund for tamilnadu


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசிற்கு மத்திய அரசு 510 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா நிவாரண நிதியை பலரும் அளித்து வருகின்றனர்.  

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.3000ம் கோடி தேவை என்று சில தினங்களுக்கு முன்பு நடந்த முதலமைச்சர்களுடனான மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கைவிடுத்தார்.

corona

இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசிற்கு மத்திய அரசு 510 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்தியா முழுவதும் 28 மாநிலங்களுக்கு மொத்தமாக மத்திய அரசு 11,092 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக அளவில் நிதி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.