தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தனது உடமைக்காக இண்டிகோ நிறுவன வெப்சைட்டை ஹேக்கிங் செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்..!
பயணத்தின் போது தனது பேக்கை மற்றொரு பயணி மாற்றி எடுத்து சென்ற நிலையில், அதனை கண்டறிய சாப்ட்வேர் எஞ்சினியர் இண்டிகோ நிறுவன இணையதளத்தை ஹேக்கிங் செய்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் நந்தன் குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது மனைவியுடன் பீகார் சென்றிருந்த நிலையில், அங்கிருந்து மும்பை வழியாக மீண்டும் பெங்களூருக்கு வந்துள்ளார்.
இவர்கள் பாட்னா விமான நிலையத்தில் இருந்து மும்பை வரும்போது, அவர்களுடன் பயணம் செய்த பயணியொருவர் நந்தன் குமாரின் உடமையை தனது பொருள் என நினைத்து தன்னுடன் எடுத்து சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் நமது உடைமை மாயமாகிவிட்டதாக நந்தனிடம் அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தான் பயணித்த இண்டிகோ நிறுவனத்தின் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட நந்தன் விஷயத்தை தெரிவிக்கவே, அவர்கள் மற்றொரு பயணி நந்தனின் பொருட்களை தவறுதலாக எடுத்து சென்றதை உறுதி செய்தனர். அவரை அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை இண்டிகோ சேவை மைய அதிகாரிகள் நந்தன் குமாரிடம் தெரியப்படுத்தாத நிலையில், அவர் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. இதனையடுத்து, ஆத்திரமடைந்த நந்தன் இண்டிகோ நிறுவனத்தின் வெப்சைட் டேட்டாவை ஹேக்கிங் செய்து, பயணியின் தகவலை சேகரித்துள்ளார்.
பின்னர், அவருக்கு தொடர்பு கொண்டு பேசி, தனது பொருளையும் வாங்கியுள்ளார். அவரும் நல்ல மனிதராக இருந்ததால், மற்றொருவரின் பொருளுக்கு ஆசைப்படாமல் அதனை ஒப்படைத்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக ட்விட்டரில் பதிவு செய்துள்ள நந்தன், தான் ஹேக்கிங் செய்ததை ஒப்புக்கொண்டு, சேவை மையத்திற்கென ஆட்கள் நியமித்து பணியாற்ற வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.