மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டாகிராம் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்ளிட்ட 8 பேர் கைது.!
சிவகங்கை அருகே 15 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 21 வயதான சூர்யா என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலர்களாக மாறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு சிறுமியை, சூர்யா அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் 2 நாட்கள் கழித்து மயக்கமான நிலையில், சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பெற்றோர் சிறுமியை விசாரித்த போது சூர்யா மற்றும் அவரது நண்பர் நிஷாத் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலர் மது கொடுத்து போதையில் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சூர்யா, நிஷாந்த், கவிராஜ், ராஜ்குமார், பாலமுருகன், செல்லப்பாண்டி, வினோத்குமார், வேலு ஆகிய 8 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் கைதான 8 பேரும் சிறுமிக்கு மதுவில் போதைப் பொருளை கலந்து கொடுத்துள்ளனர். அதன் பின்னர் சிறுமி மயக்கமடைந்த பிறகு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.