மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிமாநிலத்தில் இருந்து வரும் இவர்களுக்கு மட்டும் உடனடி இ பாஸ்! குவாரண்டைன் கிடையாது!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரும் கொரோனா பரவல் விடாது அதிகரித்து வந்தது. இந்தநிலையில் சில தளர்வுகளுடன் பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இபாஸ் நடைமுறை இன்னும் தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனாலும் இபாஸ் நடைமுறையில் அவ்வப்போது சில தளர்வுகளை அளித்து வருகிறது. சமீபத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
அதாவது, வெளி மாநிலங்களில் இருந்து வணிக நோக்கில் வருபவர்கள் 72 மணி நேரம் மட்டும் (3நாட்கள்) தங்குவதாக இருந்தால் இ பாஸ் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற் துறையினர் தவிர விருந்தோம்பல், தகவல் தொழில் நுட்பம், பொழுதுபோக்கு, சட்டம் சார்ந்த துறையினருக்கும் இச்சலுகை வழங்கப்படும் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.