கொட்டும் மழையில் நடந்துவந்த சிறுமி.! சாலை அருகே திறந்து கிடந்த கால்வாய்.! சிறுமியின் செயலால் நெகிழ்ச்சியடைந்த ஐபிஎஸ் அதிகாரி.!



ips Sylendrababu appriciate young girl

சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி, விக்னேஷ். இவர்கள் இருவரும் கடந்த 8-ஆம் தேதி மழைபெய்துகொண்டு இருக்கும் நேரத்தில் கடைக்கு சென்று வந்துள்ளனர்.

அவர்கள் வரும் வழியில் சாக்கடை திறந்த நிலையில் இருப்பதை பார்த்துள்ளனர். இதனைக்கண்ட அக்கா கிருஷ்ணவேணி வாங்கி வந்த பொருளை அவரது தம்பி விக்னேஷிடம் கொடுத்துவிட்டு, அருகில் உடைந்த நிலையில் கீழே போடப்பட்டு இருந்த பேரிக்கார்டை எடுத்து திறந்து கிடந்த சாக்கடையில் மேலே வைத்து, அருகில் இருந்த மற்றொரு பலகையை எடுத்து மூடி வைத்துவிட்டு சென்றுள்ளனர். 

இந்த காட்சியை அவ்வழியே சென்ற பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில், குழந்தைகள் இருவரும் டி.ஐ.ஜி சைலேந்திரபாபுவால் பாரபட்டப்பட்டுள்ளனர். இதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு நேற்று குழந்தைகளை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

இவர்கள் இருவருக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் தலா ரூ .2000 ரொக்கம் பரிசாக வழங்கிய நிலையில், எதிர்கால படிப்புக்கு தேவையான எந்த உதவியாக இருந்தாலும், தன்னை அழைத்துப் பேசலாம் என்று தனது அலைபேசி எண்ணையும் குழந்தைகளின் பெற்றோரிடம் தெரிவித்தார்.