மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எலிகளை விரட்டிச்சென்ற இளைஞருக்கு அந்த எலிகளால் காத்திருந்த அதிர்ச்சி..! பதறிய தாய்..! போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்.!
வீட்டில் தொல்லைசெய்த எலியை விரட்ட சென்ற இளைஞர் ஒருவருக்கு எலியை பிடிக்க பயன்படும் சுழிக்கி ஆயுதம் நெஞ்சில் குத்தி உயிர் போகும் அபாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அருகே உள்ள உஞ்சனை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (20). விஜய்யின் வீட்டிற்க்கு அருகே அதிக விவசாய நிலங்கள் இருப்பதால் நிலத்தில் இருக்கும் எலிகள் இரவு நேரத்தில் விஜய்யின் வீட்டிற்குள் புகுந்து நாசம் செய்துவந்துள்ளது. எலிகளை விரட்ட விஜய்யும் பலமுறை முயற்சி செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு எலிகள் கூடமாக சேர்ந்து விஜய்யின் வீட்டை சுற்றி அதிக சத்தத்துடன் பள்ளம் தோண்ட ஆரம்பித்துள்ளது. இதனால் எலிகளை விரட்டுவதற்காக இருட்டிற்குள் விஜய் சென்றுள்ளார். அப்போது கால் தவறி விஜய் கீழே விழுக, எலிகளை பிடிக்க பயன்படும் சுழிக்கி ஆயுதம் விஜய்யின் மார்பில் ஆழமாக குத்தியுள்ளது.
வழியால் அலறி துடித்த அவரை, உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நீண்ட நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர், உயிர் போகும் நிலையில் இருந்த விஜயை மருத்தவர்கள் காப்பாற்றியுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் விஜய் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.