53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பெண் காவலரிடம் ஆபாசமாக பேசிய ஐஆர்பிஎன் போலீஸ் அதிகாரி கைது! பரபரப்பு சம்பவம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியநிலையில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. அதனால் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேறகூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இந்திய ரிசா்வ் போலீஸ் படைப் பிரிவு காவலர்கள் மற்றும் மகளிர் போலீசார் என பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தப் பணியில் புதுச்சேரி ஐஆா்பிஎன் துணைத் தளபதி ஆா்.சுபாஷும் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என். எஸ்.பி. சுபாஷ் திருபுவனையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் காவலர், டி.ஜி.பி மற்றும் சில உயர்அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அதையடுத்து டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவாவின் உத்தரவின்பேரில் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர் மற்றும் ஐ.ஆர்.பி.என். எஸ்.பி. சுபாஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர் . விசாரணையில் எஸ்.பி. சுபாஷ் தவறு செய்தது தெரியவந்த நிலையில் அவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது