மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீதி எல்லாம் சினிமாவில் மட்டும் தானா? அமைச்சர் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய ஜெகதீஷின் நண்பர்!!
உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார் ஜெகதீஷின் நண்பர் ஒருவர்.
இரண்டு முறை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த ஜெகதீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவரது இறப்பை தொடர்ந்து ஜெகதீஷின் தந்தையும் மறுநாளே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் ஜெகதீஷ்க்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஜெகதீஷின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்கு வந்திருந்தார்.
அப்பொழுது ஜெகதீஷின் நண்பர் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்னும் எத்தனை அனிதா எத்தனை ஜெகதீஷ் பலியாவார்கள் இதற்கு ஒரு தீர்வு இல்லையா ஜஸ்டிஸ்(Justice) எல்லாம் சினிமாவில் மட்டும் தானா? நிஜத்தில் சென்ட்ரலை நம்மால் எதுவும் செய்ய முடியாதா? என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்விகளை கேட்டுக்கொண்டே பதில் ஏதும் அளிக்காமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறி சென்றுள்ளார்.